ஜயவேவா கோஷத்துடன் பிரவேசித்த ஜனாதிபதியால் சலசலப்பு!
சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபைக்குள் பிரவேசித்தார். இதன்போது ஆளும் தரப்பினர் ஜயவேவா கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் எதிரணியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக, சபையில் சற்றுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற விவாதங்களை அவதானிப்பதற்காக வருகைதந்திருந்த ஜனாதிபதி சிறிது நேரம் கழித்து சபையை விட்டு வெளியேறினார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்றும் இன்றும் விவாதங்கள் இடம்பெறும் நிலையில் அதனை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி வருகை தந்திருந்தார்.
தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பான இரண்டாம் நாள் நாடாளுமன்ற விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நாடளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதியை அரசாங்கத்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றிருந்தனர்.
இதேவேளை ஜனாதிபதியின் வருகையின்போது எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.