மொட்டை பிரிக்கும் வேலையில் ஜனாதிபதி ; யாழில் மனோகணேசன்!
பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கச்சிதமாக ஈடுபட்டு கொண்டு இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதன் அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை எதிர்பார்க்கலாம் என்றார். யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (2) காலை ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு இதனை தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசா எனக்கு தலைவர் அல்ல
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ரணில் விக்ரமசிங்கவையும் சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.
எல்லாவற்றையும் ஊடகங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சஜித் பிரேமதாச எங்கள் கூட்டணிக்கே தலைவரொழிய சஜித் பிரேமதாசா எனக்கு தலைவர் அல்ல என்றும் மனோகணேசன் இதன்போது மேலும் கூறினார்.