பேரிடரால் பாதிக்கப்பட்ட நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி அனுரவின் அர்ப்பணிப்பு!
பேரிடரால் பாதிக்கப்பட்ட நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி அனுர குமார பல ஏற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில், பல நாடுகளும் இலங்கைக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன.
இந்நிலையில் நாட்டின் இடர்நிலையை கருத்திற்கொண்டு, பேரனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்நோக்கும் வகையில், அதற்கு தேவையான மேலதிக நிதியை பெற்றுக்கொள்ள குறைநிரப்பு பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை நேற்று (03) மாலை தீர்மானித்தது.

பிரதிகள் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
இதனை நேற்று இரவு, அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அமைச்சரவை தீர்மானத்தின் பிரதிகள் விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுமென்றும் அவர் சபையில் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விரிவாக ஆராய்ந்த நிலையில், தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஜனாதிபதி , அமைச்சர்களுக்கு விளக்கியதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி அனுரவின் அர்ப்பணிப்பான சேவை , பாதிக்க ப்ட்டுள்ள இலங்கை மக்களுக்கு பெரும் ஆறுதலை தருவதாக அமைந்துள்ளது.