ஜனாதிபதி அநுர குமார திடீர் விசிட்; இடைநடுவில் செய்த நெகிழ்ச்சி!
போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் மத்திய மாகாண வேலைத்திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (11) நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.
இதற்காக நுவரெலியா சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து, அப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

உற்சாகமாக வரவேற்ற தோட்டத் தொழிலாளர்கள்
ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது, தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது சம்பளத்தை அதிகரித்தமைக்காக நன்றியையும் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள், "எமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், எமது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள்தான்" எனத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
