ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க துபாய்க்கு பயணம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு உலக அரசுகளுக்கான உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (10) துபாய்க்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் காலை 10.10 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவையின் E. K - 651 விமானத்தின் மூலம் துபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுச்சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி உட்பட 13 அதிகாரிகள் துபாய்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு துப்பாய்க்கு புறப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.