வரலாற்றை மாற்றிய ஜனாதிபதி அனுர குமார!
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் குடிவரவு- குடியல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம், இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (1) ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரை நீக்க பலகையில், “பொதுமக்களது நிதியைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிராந்திய அலுவலகம் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது” என்ற வசனம் அனைவர் கவனத்தையும் பெற்றுள்ளது.
எனினும் திறப்பு நினைவு பலகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயர் பொறிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டுள்ளதென பொறிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலின் ஒரு புதிய அணுகுமுறை
இதேவேளை, யாழில் அமைக்கப்படும் சர்வதேச தர கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று கலந்து கொண்டிருந்தார்.
இந்த மைதானத்துக்கான திறப்பு நினைவுபலகையில் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்படாமை பலரின் அவதானத்தை பெற்றுள்ளது. இது எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியான அரசியல் எடுத்துகாட்டாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது ஜனாதிபதி அனுரவின் இந்த நடவடிக்கை இலங்கை அரசியலின் ஒரு புதிய அணுகுமுறையை பிரதிபலிக்கின்றது.
