நாடாளுமன்றில் ஜனாதிபதி அனுரவின் உருக்கமான உரை
2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு - பதில் உரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தினார் .
நிதி அமைச்சு மற்றும் பொதுபாதுகாப்பு அமைச்சின் கீழ் அவசர காலசட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அவர் பல கருத்துக்களை முன்வைத்த நிலையில், அவசர காலதடை சட்டத்தை சடைமுறைப்படுத்தி அதை நாம் அடக்குமுறையாக பிரயோகிக்கவில்லை என தெரிவித்தார்.

நாட்டில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை உறுதிப்படுத்துவதன் மூலம், தற்போதைய நாட்டை விட சிறந்த ஒரு தேசத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (05) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
சிறந்த ஒரு தேசத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு
அத்துடன் உயிரிழந்தவர்களை மீளக் கொண்டு வர முடியாது என்றாலும், தப்பிப் பிழைத்தவர்களுக்கு ஒரு சிறந்த தேசத்தை வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்று கூறினார்.
தற்போதைய அனர்த்த நிலைமை நாட்டை ஒன்றிணைத்துள்ளது என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் நிவாரணப் பணிகளை செய்வதற்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்துள்ளார்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அனர்த்த நிலைமையின் போது அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு ஜனாதிபதி தனது நன்றி தெரிவித்தார்.
அத்துடன், கடமையின் போது உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டார்.