இலங்கையில் வரலாற்றில் முதல்முறை; சுதந்திர தினத்திற்கு எளிமையாக வந்த ஜனாதிபதி அனுர!
இன்று இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தின பிரதான வைபவம், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. அதற்காக சுதந்திர சதுக்கத்திற்கு மூன்று பொலிஸ் மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்புடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வந்தார்.
ஆம்புலன்ஸ்கள் அல்லது பிற துணை வாகனங்கள் எதுவும் இல்லை.பிரதமரும் மற்ற விருந்தினர்களும் வந்தபோது, ஒரே ஒரு பொலிஸ் மோட்டார் சைக்கிள் மட்டுமே முன்னால் வந்தது.
அதேவேளை முன்னதாக, சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஜனாதிபதி மற்றும் பிற தலைவர்கள் தங்கள் மனைவிகள் மற்றும் கணவர்களுடன் வருகை தருவது வழக்கமாக இருக்கும்.
ஆனால் இந்த முறை அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுடன் ஆர்ப்பாட்டங்களின் அரச தலைவர் மிக எளிமையாக கலந்துகொண்ட சுதந்திர தின நிகழ்வு இது என வரலாற்றில் ஜனாதிபதி அனுர தொடர்பில் பதிவாகும் நிகழ்வாகவும் இது அமையும் .