ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள்: பிள்ளையான் ஆவேசம்
ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள் அவர்களிற்கு ஆயுதங்களை கைவிட்டவர்களுக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைளிற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து பிள்ளையானின் முன்னாள் செயலாளர் அசாத் மௌலானா வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் பிள்ளையான் இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அவர் மேலும் தெரிவித்தாவது, உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தர வதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆறு வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது.
ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல் நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு சென்றார்? தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ண உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்ற வேளை சிஐடியின் தலைவராக பணியாற்றினார்.
நான் ஆயுதப்போராட்டத்தை விரும்பாததால் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து முதலமைச்சரானேன். 2015 முதல் 2020 வரை சிறையிலிருந்த ஒருவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பேரழிவு தாக்குதலை எவ்வாறு திட்டமிட முடியும்.
அசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம். நான் சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி போலியான கட்டுக்கதைகளை உருவாக்கியமைக்காக அசாத்மௌலானவை கைதுசெய்ய உதவுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.