உகண்டா ஜானதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்த இலங்கை தூதுவர்!

sri lanka Uganda gotabaya rajapakse Velupillai Gananathan Yoweri Museveni
By Shankar May 08, 2021 04:12 PM GMT
Report

உகாண்டாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கபட்டுள்ள உயர் ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கணநாதன் தனது நற்சான்றிதழ்களை உகாண்டாவின் ஜனாதிபதியான அதி மேதகு யொவெரி ககுடா முசெவெனி அவர்களிடம் 2021 மே 06 ஆந் திகதி உகாண்டாவின் என்டெபேயில் உள்ள அரச மாளிகையில் வைத்து கையளித்தார்.

உத்தியோகபூர்வ விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற பிரத்தியேக சந்திப்பின் போது, ஜனாதிபதியும் உயர் ஸ்தானிகரும் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் நிலை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, சமீபத்திய ஆண்டுகளில் இலங்கைக்கும் உகாண்டாவிற்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஒப்புக் கொண்டனர்.

உகண்டா ஜானதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்த இலங்கை தூதுவர்! | Presents Certificates Of Merit President Of Uganda

குறிப்பாக வர்த்தகம், முதலீடு மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகள் போன்ற ஒத்துழைப்பின் பல புதிய துறைகளில் இருதரப்பு உறவுகளின் உண்மையான திறனை அடைந்து கொள்வதற்கான அவசியத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.   

குறிப்பாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் காலத்தில் உகாண்டா இலங்கையுடன் அனுபவித்த நெருக்கமான உறவுகளை நினைவு கூர்ந்த ஜனாதிபதி முசெவெனி, இருதரப்பு உறவை புதிய உயரத்திற்கு உயர்த்துவதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இருதரப்பு பொருளாதார உறவுகளை அதிகரிப்பதற்கு இந்த முயற்சிகள் அனைத்தும் பின்பற்றப்படல் வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பரஸ்பர பொருளாதார நலன்களுக்காக ஆபிரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதாக உயர் ஸ்தானிகர் கனநாதன் ஜனாதிபதி முசெவெனிக்கு விளக்கினார்.   

உகண்டா ஜானதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்த இலங்கை தூதுவர்! | Presents Certificates Of Merit President Of Uganda

ஆபிரிக்க ஒன்றியத்தில் ஒரு பார்வையாளர் நாடென்ற வகையில்இ நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்காக ஆபிரிக்க உலகை அணுகும் நோக்கில், இலங்கை ஆபிரிக்க நாடுகளுடனும், கிழக்கு மற்றும் தென்னாபிரிக்காவிற்கான பொதுவான சந்தை, மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம், தென்னாபிரிக்க அபிவிருத்தி சமூகம், மத்திய ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் போன்ற துணை பிராந்திய அமைப்புக்களுடனும் தொடர்புகொள்வதற்கான ஒரு தளமாக இதைப் பயன்படுத்துவதற்கான முன்னேற்றங்களை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடர்பில் குறிப்பிடுகையில்,

இலங்கையின் தேசிய விமானமான ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தனது முதலாவது நேரடி விமான இணைப்பை நைரோபியுடன் 2021 ஏப்ரல் 22 ஆந் திகதி தொடங்கியுள்ளதாகம், மேலும் உகாண்டாவிலிருந்து இலங்கை வரையிலான பயணிகளுக்கு நேரடி நன்மையை வழங்கும் ஒரு இடைநிலை ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் உகாண்டா எயார்லைன்ஸ் ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விமான ஏற்பாடுகள் ஒரு சிறந்த செய்தியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதிஇ இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள நாடுகள்இ தமது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக இந்த வசதிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான சூழ்நிலையை உருவாக்குதல் வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் உகாண்டாவிற்கும் இடையிலான சுற்றுலா மேம்பாட்டிற்கு வசதியாக இரு நாடுகளும் விமான இணைப்பைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.  

உகாண்டாவில் சிறிய நீரியல் வளத் திட்டங்களின் முன்னோடிகளான இந்தத் துறையில் ஏகபோக உரிமையை அனுபவிக்கும் இலங்கை முதலீட்டாளர்களின் முதலீடுகளைப் பாராட்டிய ஜனாதிபதி முசெவெனி, உகாண்டாவில் அந்நிய நேரடி முதலீட்டிற்காக வழங்கப்பட்டுள்ள இலாபகரமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அனுபவிக்கும் வகையில்இ விவசாயம்இ உற்பத்தி மற்றும் ஏனைய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக அதிகமான இலங்கை முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சந்திப்பின் நிறைவில்இ இலங்கைக்கும் உகாண்டாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் வெற்றிகளை எய்திக் கொள்வதற்காக உயர் ஸ்தானிகருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதிஇ உகாண்டா அரசாங்கத்தின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தினார்.

உகாண்டாவிற்கான இலங்கையின் வதிவிட உயர் ஸ்தானிகராக 2013 - 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பணியாற்றிய உயர் ஸ்தானிகர் கனநாதன், இரண்டாவது முறையாக தனது நற்சான்றிதழ்களை கம்பாலாவில் வைத்து ஜனாதிபதி முசெவெனியிடம் கையளித்துள்ளார்.

உயர் ஸ்தானிகர் கனநாதன் 2020 ஆம் ஆண்டில் கென்யா உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படும் வரை, உகாண்டா உட்பட 8 அண்டை நாடுகளுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற உகாண்டாவிற்கான இலங்கையின் கௌரவ தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

உயர் ஸ்தானிகர் கனநாதனின் ஆபிரிக்கப் பிராந்தியத்தில் உள்ள பரந்த அறிவையும் அனுபவத்தையும் கருத்தில் கொண்டு, 2020 ஜனவரியில் இலங்கைப் பிரதமரின் ஆபிரிக்காவுக்கான சிறப்புப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார்.

உயர் ஸ்தானிகர் கனநாதன் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்களுக்கான நிறுவகத்தில் தனது தொழில்முறைத் தகைமைகளைப் பெற்றிருப்பதுடன், புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.  

15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US