தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை; தமிழக அரசு அறிவிப்பால் மகிழ்ச்சி!
தமிழகத்தில் அரச பாடசாலைகளில் தமிழ் மொழியில் படித்தவர்கள் உள்ளிட்ட 3 பிரிவினருக்கு அரச வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்தவர்களுக்கும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரச பாடசாலைகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஆளுநர் அறிக்கையிலும், தொடர்ந்து மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையிலும் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதேவேளை போரில் உடல் தகுதியை இழந்த இராணுவத்தினர், ஆதரவற்ற கைம்பெண்கள், கலப்புத் திருமணத் தம்பதியர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு முன்னுரிமை வழங்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.