ப்ரீ வெட்டிங் சூட்; இன்றைய தலைமுறையை கிழித்து தொங்கவிட்ட தமிழ் மாணவி!
நவநாகரீகம் என்கின்ற பெயரில் எமது மக்களின் வாழ்வியலை அடியோடு மாற்றிவிட்டது இன்றைய கலாச்சாரம். சிறியவர்கள முதல் பெரியவர்கள்வரை சமூகவலைத்தளங்களிற்கு அடிமையாகிவிட்டார்கள்.
கலாச்சாரம், பண்பாடு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மாறிக்கொண்டிருக்கின்றது. அந்த காலத்திலும் கூட திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் புகைப்படமும் வீடியோ சூட்டுக்களும் கூட இருந்தன.
அந்த புகைப்படமும் காணொளிகளும் எல்லோரும் குடும்பமாக அமர்ந்து பார்க்க கூடியதாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் ப்ரீ வெட்டிங் சூட் எனும் பெயரில் அந்தரங்காமாக இருக்க வேண்டியவை எல்லாம் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது.
அதுமட்டுமல்லாது அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது பேக்ஷனாகி விட்டது. இந்நிலையில் ப்ரீ வெட்டிங் சூட் தொடர்பில் கிளிநொச்சி- வட்டக்கச்சி பாடசாலை மாணவி ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்வில் கலந்து கொண்டு அது தொடர்பில் கிழி கிழியென கிழித்துள்ளார்.