பிரசன்ன ரணதுங்கவின் மனைவி ஒரு தமிழ் பெண்
" பிரசன்ன, ஹரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுகாரரோ? அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மனைவி ஒரு தமிழ் பெண்ணாம்.
1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் நடந்த போது மனைவியை வெளியில் அழைத்துச் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் 1967 January 1 ம் திகதி பிறந்துள்ளார். அவர் 1983ம் ஆண்டு திருமணம் செய்திருந்தால் அவர் 16 வயதில் திருமணம் செய்திருக்க வேண்டும்?
1983 - 1967 = 16 அதாவது இள வயது திருமணம்? அப்படியானால் இள வயது குற்றவாளிகளுக்கான தண்டனை கொடுக்க வேண்டி வருமே? பொதுச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கான வயது 18 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது விக்கிபீடியாவில் வயதை பாருங்க?
நாடாளுமன்றத்தில் பொய் சொன்னால் வழக்கு வராது எனும் தைரியமா? இல்லை, பொய் சொல்வது இவர்களது வழக்கமா? " என சமூக வலைத்தளத்தில் நபர் ஒருவர் பதிவு செய்துள்ளார்