உலகின் No.1 செஸ் வீரரான கார்லசனை வெற்றிகொண்ட பிரக்யானந்தா!
போலந்தில் நடைபெற்று வரும் க்ராண்ட் செஸ் டூர் தொடரில் உலகின் No.1 செஸ் வீரரான கார்லசனை வீழ்த்தி இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த பிரக்யானந்தா இமாலய வெற்றி பெற்றுள்ளார்.
போலந்து நாட்டில் கடந்த 8 ஆம் தேதி சூப்பர் பெட் ராபிட் மற்றும் பிலிட்ஸ் போலந்து செஸ் தொடர் தொடங்கியது.
9ஆவது கிராண்ட் செஸ் டூர் தொடரின் முதல் சீசன்
இதில், செஸ் உலகக் கோப்பை சாம்பியனான மேகன்ஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழகத்தில் பிரக்ஞானந்தா சாதனை படைத்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற செஸ் உலகக் கோப்பையில் கார்ல்சனிடம் தோல்வி அடைந்த பிரக்ஞானந்தா இன்று அவரை வீழ்த்தி சாதித்திருக்கிறார்.
கடந்த 8ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் டி குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூ ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் செஸ் உலக கோப்பை சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் பங்கேற்ற நிலையில் அவரை வெற்றிகொண்டுள்ளார் பிரக்ஞானந்தா.
இந்நிலையில் "இங்கு வீழ்த்த முடியாததுன்னு எதுவும் இல்ல, பலம் பொருந்திய யானையையும் ஒரு சிட்டெறும்பு நினைத்தால் வீழ்த்த முடியும் என்பதை பிரக்யானந்தாவின் இந்த வெற்றி எடுத்துக்காட்டுகின்றது.