கொந்தளிக்கும் மக்களால் மற்றுமொரு அரசியல்வாதிக்கு நேர்ந்த கதி!
ஹிமதுவ பிரதேச சபை தவிசாளர் சரத் குமார உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது வீட்டில் மக்கள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழுவொன்றினால் நேற்றிரவு அவரது வீடு தாக்கப்பட்டமையை அடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாநகர சபை உறுப்பினர் சுரங்க ராஜபக்ஷவிற்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்று தீவைக்கப்பட்டுள்ளது.
ஸ்பிரிங்வெளி - ரொக்கில் சந்தியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையம் பொதுமக்களால் இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் அமைதியான முறையில் அரசாங்கத்தை விலகுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில், நேற்றையதினம் மஹிந்த ஆதரவார்கள் போராட்டகாரகள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர்.
அடுத்து கொழும்பு கலவரபூமியானதுடன், ஆட்சியில் உள்ளவர்களின் வீடுகளை தேடித்தேடி மக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
