லண்டனில் வசிக்கும் துவாரகா அசலா நகலா? காணொளியில் உரையாடிய த. சித்தார்த்தன்
பிரபாகரனினது ஒரே ஒரு மகளான துவாரகா போல் ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் ஒரு பெண் தான்தான் பிரபாகரனின் மகள் துவாரகா தான் உயிரோடு இருக்கின்றேன் என பல முக்கியஸ்தர்களிடம் பல்வேறு இடங்களில் நேரடியாகவும் தொலைபேசி ஊடாகவும் சொல்லி வருகின்றார்.
அண்மையில் அப்படி ஒரு முக்கியஸ்தரான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரான திரு தர்மலிங்கம் சித்தார்த்தனை துவாரகா என்று அழைக்கப்படும் அப்பெண் சித்தார்த்தனிடம் கானொளி மூலமாக உரையாடி இருக்கின்றார்.
இதில் சந்தேகமடைந்த திரு சித்தார்த்தன் அவர்கள் நாளை நமதே திரைப்படத்தில் வரும் குடும்பப் பாட்டுபோல அவரினது தாய் தந்தையரான பிரபாகரன் மதிவதனி பற்றி பல கேள்விகளை அவரிடம் கேட்ட போது ஒன்றுமே தெரியாது முழித்ததை வைத்து அப்பெண் நகல் என்ற முடிவிற்கு வந்ததாக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
ஆரம்ப காலங்களில் பிரபாகரனோடும் அவரது மனைவி மதிவதனியோடும் உமாமகேஸ்வரன் புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்ததினால் பின்னர் அதில் இருந்து பிரிந்து புளொட் அமைப்பினை தொடங்கியதனால் இயல்பாகவே அதன் வழிவந்த சித்தார்த்தனிற்கு புலிகளின் தலைவர் குடும்ப வரலாறுகள் நன்றாகவே தெரிந்திருந்தது.
எது எப்படியோ அசலான துவாரகா 2009 ல் இருந்து காணாமல் ஆக்கப்பட்டார் என்று சொல்லி வரும் வேளையில் ஒரு வேளை அவர் உயிரோடு இருந்தால் மாதிரித் தமிழீழத்தின் இளவரசியேதான் அப்படி இருக்கும்போது இந்த நகல்த் துவாரகா அந்த இளவரசிப் பட்டத்திற்கு ஆசைப்பட்டு இருக்க வேண்டும் என குறித்த தகவலை முகநூலில் சுவிஸில் வாழ்ந்து வரும் யாழ் வடமராட்சியை பிறப்பிடமாக கொண்ட கேசவன் வேலாயுதம் என்பவர் பதிவிட்டுள்ளார்.