பிரபாகரன் இருந்திருந்தால் இவர்கள் இப்படி ஆடி இருக்கமாட்டார்கள்; பொன்சேகா ஆதங்கம்!
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்திருந்தால், இலங்கை அரசியல்வாதிகள் தற்போது நடந்துக்கொள்வது போல் பைத்தியகாரத்தனமாக நடந்துக்கொள்ள மாட்டார்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகவையலாளர்கல் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் இராணுவ தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனை கூறியுள்ளார்.
அதோடு நாங்கள் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்புகளின் பிரதிபலன்கள் இன்னும் கிடைக்கவில்லை என தெரிவித்த பொன்சேகா, ஒரு வேளை பிரபாகரன் இருந்திருப்பார் என்றால், நாட்டின் அரசியல்வாதிகள் இப்படி மேலும் கீழும் குதித்து பைத்தியகாரத்தனமாக நடந்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
You My Like This Video