தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்;ஆச்சர்யத்தை ஏற்படுத்திய பிக்குகள்!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு மேலதிகமாகத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று பௌத்த பிக்குகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளமை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமதக் குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்
அந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே பௌத்த பிக்குகள் உட்பட சர்வமதத் தலைவர்கள், 13 ஆவது திருத்தத்துக்கு மேலதிகமாகத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
அதேவேளை 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாகக் கடிதம் எழுதியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்குகள் 13 ஆவது திருத்தத்துக்கு மேலாக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.