புதிய அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மின்சார சபை!
கொழும்பு மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பல புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாகாணத்தில் மின்சார விநியோகம் வழமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
மற்ற அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரத்தை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் மாலை (09-12-2023) கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் பாரிய மின் தடை ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட 99% பிரதேசங்களுக்கு மின்சார விநியோகம் மீளமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.