வறண்ட வானிலை காரணமாக மின் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு
நிலவும் வறண்ட வானிலை காரணமாக மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, மேலும் பல மின் நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ஊடகப் பேச்சாளர் தம்மிகே விமலரத்ன தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை அதன் அதிகபட்ச கொள்ளளவான 900 மெகாவாட் மின்சாரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், களனிதிஸ்ஸ 'நாப்தா' மின் நிலையம் மற்றும் சப்புகஸ்கந்த மின் நிலையம் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் அதிகரித்து வரும் நீர் நுகர்வு மற்றும் குறைந்த அளவிலான விநியோகம் காரணமாக, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், வாகனங்களை கழுவுதல் மற்றும் தோட்டக்கலை போன்ற அத்தியாவசியமற்ற செயல்களுக்கு நீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.