பெண்களுக்கு கை கொடுக்கும் பொட்டுக் கடலை!
பொதுவாக பெண்கள் ஏதாவது பண்டிகை நாட்களிலோ அல்லது கோவிலுக்கு போகும் நாட்களிலோ மாத விலக்கு வந்து விட கூடாது என அதை தள்ளி போட முயற்சிப்பர் .
பெண்களின் இந்த முயற்சிக்கு பொட்டுக் கடலை கைகொடுக்கும் என கூறப்படுகின்றது.
விசேட நாட்களில் மாதவிடாயை தள்ளிப்போட நினைக்கும் பெண்கள் பின் வரும் இயற்கை வழிகளை கடை பிடிக்கலாம்.
பெண்கள் பொட்டுக் கடலையை, காலையில் எழுந்ததும் ஒரு பிடி எடுத்து கொள்ளுங்கள் . அந்த பொட்டு கடலையை வெறும் வயிற்றில், நன்கு மென்று தின்று, தண்ணீர் பருகி வந்தால் மாதவிடாயை தள்ளிபோடலாம் .
[
வெந்தயம் சிறந்த பலனை கொடுக்கும் .மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே,பெண்கள் இந்த சிகிச்சையை தொடங்கலாம் சிறிது வெந்தயத்தை எடுத்து அதை வாயில் இட்டு தண்ணீர் பருகி வர, விலக்கு தள்ளிப் போகும்.
வெள்ளரியும் இந்த சிகிச்சையில் பலன் தரும் . மாதாந்திர விலக்கு வர வாய்ப்புள்ள ஐந்து நாட்களுக்கு முன்னால் இருந்தே வெள்ளரிப் பிஞ்சுகளை உட் கொண்டு வரலாம், வெள்ளரி மூலம், உடல் சூடு குறைந்து, விலக்கு தள்ளிப் போகும்.
அதிக அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சை சாறும் மாதவிடாய் தள்ளி போட உதவும் என்றும் கூறப்படுகின்றது.