இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு ஒத்திவைப்பு!
இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இன்று நடைபெறவிருந்த நிலையில் அது பிற்போடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
35 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க திட்டம்
இதன்படி 35 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
அதேசமயம் , நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இன்றைய வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.