மாணவர்களுக்காக உயர்தர பரீட்சையை பிற்போடுங்கள் ; சாமர சம்பத் எம்பி
உயர்தர பரீட்சையை பிரதமரோ, ஆளும் தரப்பின் 159 உறுப்பினர்களோ அல்லது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களோ எழுத போவதில்லை. மாணவர்கள் தான் பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
ஆகவே மாணவர்களின் கோரிக்கைக்கு அமைய பரீட்சையை பிற்போட வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் வலியுறுத்தினார்.

மாணவர்களின் கோரிக்கை
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (24) இடம்பெற்ற தேசிய சூழல் ( திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது
2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. போதுமான காலவகாசம் வழங்கப்படவில்லை. ஆகவே பரீட்சையை பிற்போடுமாறு மாணவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
உயர்தர பரீட்சையை பிரதமரோ,ஆளும் தரப்பின் 159 உறுப்பினர்களோ அல்லது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களோ எழுத போவதில்லை. மாணவர்கள் தான் பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
ஆகவே மாணவர்களின் கோரிக்கைக்கு அமைய பரீட்சையை பிற்போட வேண்டும்.
மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் தான்தோன்றித்தனமாக அரசாங்கம் செயற்பட கூடாது என்றார்.