ஈஸ்டர் தாக்குதல் குறித்து முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி
ஈஸ்டர் தாக்குதல் தாக்குதல் தொடர்பில் நீதி வழங்கப்படவேண்டும் என சமூக ஊடகத்தில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் சிஐடியின் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் விசாரணைகளிற்காக ஆஜராகுமாறு புலனாய்வு பிரிவினர் குறித்த இளைஞருக்கு உத்தரவிட்டிருந்தனர். அந்த பிரிவின் தலைவர் கெலும்கருணாரட்ண குறிப்பிட்ட இளைஞரிற்கு எழுத்துமூலம் உத்தரவிட்டிருந்தார்.
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெறும் குற்றச்செயல்கள் குறித்து சிஐடியினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதால் அந்த இளைஞர் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக உத்தரவில் தெரிவிக்கப்படடடிருந்தது.
காலி கினிதுமவை சேர்ந்த செகான் மாலக கமகே என்ற இளைஞரையே சிஐடியினர் நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தனர். இந்நிலையில் விசாரைணக்கு அழைக்கப்பட்ட இளைஞர் கத்தோலிக்க பேரவை உறுப்பினர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல் தொடர்புகள் உள்ளன என தனது முகநூலில் பதிவிட்டிருந்த இளைஞர், அரசாங்கம் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.