யாழ் இந்து கல்லூரியை விமர்சித்து சமூக வலைதளங்களில் வெளியான பதிவு
அரசாங்கத்திற்கு மதிப்பளிக்காது யாழ் இந்துக் கல்லூரி அதிபரின் செயலை விமர்சித்து தற்போது சமூக வலைதள பதிவுகளில் வெளியாகியுள்ளது
மேலும் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாவது,
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பைதை நிறுத்தவும் என கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 26ம் திகதி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கல்வி அமைச்சின் அனைத்து பிரிவு அதிகாரிகளுடன் கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
மக்கள் பிரதிநிதிகளை பாடசாலைகளுக்கு அழைத்துவருவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது யாழ் இந்துக்கல்லுாரிக்கு அரசாங்கத்தின் முக்கிய புள்ளியாக உள்ள கடற்றொழில் அமைச்சர் குறும்படம் எடுத்தல் என்ற போர்வையில் யாழ் இந்துக்கல்லுாரி அதிபரால் அழைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே ஆமிக்காரத் தளபதிகளின் பின்னால் வால்ப் பிடித்து, கல்விக்கு முக்கியம் கொடுக்காது விளையாட்டுக்களில் பிள்ளைகளை ஈடுபடுத்தி நாசப்படுத்தி வரும் அதிபர், தற்போது அரசியல்வாதிகளையும் வால்பிடிக்கத் தொடங்கியுள்ளார்.
அண்மையில் யாழ் இந்துக்கல்லுாரி மாணவர்கள் இருவர் நிறை போதையில் பொலிசாரால் பிடிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கையும் சீரழிந்துள்ளது.
யாழ் இந்துக்கல்லுாரி மாணவர்களின் நடத்தைகளைப் பற்றிக் கவனிக்காது நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை நாசப்படுத்தும் அளவுக்கு யாழ் இந்துக்கல்லுாரி அதிபரின் செயற்பாடு அமைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.