பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாகவில்லை
பொலிஸ் மா அதிபருக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதே தவிர, பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாகவில்லை என ஜனாதிபதிக்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளது.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் பிரகாரம், பொலிஸ் மா அதிபரின் பதவி வெற்றிடமாக இல்லாத நிலையில், ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாது எனவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, சம்பந்தப்பட்ட சட்டப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை, பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருக்கும் என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளை மேற்கொள்வதில் மாத்திரமே தடையாக இருந்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.