இந்தியாவின் பிரபல பாடகி பின்னணி மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி
இந்தியத் திரையிசையின் முன்னணி பாடகி ஆஷா போஸ்லே, மாரடைப்பு மற்றும் நுரையீரல் தொடர்பான சிக்கல்கள் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 92 வயதாகும் அவர், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய இசைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

ஆஷா போஸ்லே
தனது சகோதரி லதா மங்கேஷ்கரின் நிழலில் இருந்து விலகி, தனது தனித்துவமான பாணியால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.
காதல் பாடல்கள் முதல் கபரே பாடல்கள் வரை, கஜல்கள் முதல் பொப் இசை வரை அனைத்து வகைகளிலும் ஆஷா போஸ்லே சாதனை படைத்தவர். காலத்தால் அழியாத பாடல்களை அவர் வழங்கியுள்ளார்.
அத்துடன், 1990-களில் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து “ரங்கீலா ரே”, “தன்ஹா தன்ஹா” போன்ற பாடல்கள் மூலம் இளைய தலைமுறையினரையும் கவர்ந்தார்.
அவரின் கலைச் சேவையைப் பாராட்டி இந்திய அரசு தாதாசாகேப் பால்கே விருது மற்றும் பத்ம விபூஷன் ஆகிய உயரிய விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளது.