நல்லூர் கந்தனை தரிசித்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி!
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு நல்லூர் கந்தனை தரிசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைக்காக பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் ஊடக்வே மூன்று நாள் அப்போஸ்தலிக்க விஜயமாக யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள அவர் சற்று முன்னர் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் கந்தனை தரிசித்ததாக தெரிய வந்துள்ளது.
குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவில் விசேட திருப்பலி
மூன்று நாள் அப்போஸ்தலிக்க விஜயமாக யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று காலை குருநகர் புனித யாகப்பர் ஆலய திருவிழாவில் விசேட திருப்பலியில் கலந்து கொண்டு திருப்பலியினை ஒப்புகொடுத்தார்,
இந்நிலையில் நாளைபுதன்கிழமை இளவாலை புதை அன்னாள் ஆலயத் திருவிழாவில் பங்கேற்கவுள்ளதோடு , தீவக மறைக்கோட்ட பங்குகளுக்கும் விஜயம் செய்வதுடன் முல்லைத்தீவுமாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் பார்வையிட வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் சுனாமி நினைவாலயத்தில், இயற்கை அளர்த்தத்தினால்` இழந்தோரின் அஞ்சலி நிகழ்விலும் பங்குகொள்ளவுள்ளார்.
வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே ஆண்டகை அவர்கள் , யாழ் நகரில் தங்கியுள்ளபோது குருக்கள், துறவிகள், பொதுநிலை இறைமக்களையும் சந்திக்கபவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் புனித மடுத்தினார் குருமடம் புனித சவேரியார் குருமத்திற்கும், செபமாலை தாசர் சபை ஸ்தாபகர் இறை அடியார் நோமஸ் அடிகளாரின் கல்லறைக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன், யாழ் நகரின் பிரசித்தி பெற்றஇடங்களையும் பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பிறாயன் ஊடக்வே பார்வையிடுவார் எனவும் கூறப்படுகின்றது.