தூக்கி எரியும் பூசணி விதைகளில் இத்தனை நன்மைகளா?
பூசணி விதைகள் மெக்னீசியம், ஜிங்க், இரும்பு, புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகளின் வளமான மூலமாகும். இது போன்ற ஊட்டச்சத்துக்கள் இதனை ஒரு உண்மையான சூப்பர்ஃபுட் ஆக்குகிறது. பூசணி விதைகள் பொதுவாக வறுத்து எடுத்து கொள்ளப்படுகின்றன அல்லது உணவுகளில் சேர்க்கப்படுகின்றன.
எனவே பூசணி விதைகள் போன்ற டிரிப்டோபான் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது மனச்சோர்வைக் குறைத்து அங்கு தூங்க உதவும். தினமும் காலை வெறும் வயிற்றில் பூசணி விதை தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
செரிமானத்திற்கு உதவுகிறது
பூசணி விதைகள் டயட்ரி ஃபைபர் சத்துக்கான நல்ல மூலமாகும், இது செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்க ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காலை வெறும் வயற்றில் பூசணி விதை நீரைக் குடிப்பது உங்கள் செரிமான செயல்முறையை சிறப்பாக தொடங்கவும், நாள் முழுவதும் உகந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலை உறுதி செய்யவும் உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
பூசணி விதைகளில் நிறைந்துள்ள வைட்டமின் ஈ மற்றும் பீனாலிக் சேர்மங்கள் இதய நோயுடன் தொடர்புடைய ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸை குறைக்கின்றன. இதிலிருக்கும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதயத் துடிப்பு சீராக இருக்க உதவும். பூசணி விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உட்பட நிறைவுறா கொழுப்புகளின் சிறந்த மூலமாகும், இவை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் பண்புகளுக்காக பிரபலமாக உள்ளன. எனவே இந்த நீரை பருகுவது கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இன்ஃப்ளமேஷன குறைக்கவும், ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவும்.
சிறுநீர்ப்பை-க்கு நல்லது
பூசணி விதைகளில் லிக்னான்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன, இவை சிறுநீர்ப்பையின் புறணியை ஆற்றவும் எரிச்சலை குறைக்கவும் உதவுகின்றன. மேலும், பூசணி விதைகளில் துத்தநாகம் (ஜிங்க்) நிறைந்துள்ளது. இது ப்ரோஸ்டேட் மற்றும் சிறுநீர் பாதை ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக ஆண்களுக்கு அவசியம். இது இன்ஃப்ளமேஷனை குறைக்க உதவுகிறது மற்றும் சிறுநீர்ப்பையின் ஆரோக்கியமான செயல்பாட்டை ஆதரிக்கிறது. இந்த தண்ணீரை தொடர்ந்து குடிப்பது சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைக்க, சிறுநீர்ப்பை சார்ந்த சில பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.