தேர்தலில் விஜய்யின் வெற்றியை முன்பே கணித்த நடிகை பூஜா ஹெக்டே;வைரலாகும் காணொளி
தமிழக முதல்வராக விஜய் நாளை (மே 7) தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிர அரசியல் கட்சியை தொடங்கினார்.
அதோடு முதல் மாநாட்டிலேயே தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என ஆவேசமாக பேசினார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

வைரலாகும் காணொளி
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே ஒரு கியூட்டான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் ஒரு பலகையில் ‘தேர்தலில் யார் வெற்றி பெறுவார்?’ என எழுதப்பட்டிருக்கிறது.
அதை காட்டி விட்டு அருகில் இருக்க விஜயை காட்டி இவர்தான் என பூஜா ஹெக்டே கண் சிமிட்டுகிறார். அதைப்பார்த்து விஜய் வெட்கத்தில் முகத்தை மூடி சிரிக்கிறார். இந்த புகைப்படம் விஜய் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.