மலையகத்திலும் சூடுபிடித்த பொங்கல் வியாபாரம்! (Photos)
உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நாளை (ஜன. 15) மலரவுள்ள உழவர் தைத்திருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
அந்த வகையில் மலையக பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சமய சம்பிரதாயங்களுக்கு அமைய தைப்பொங்கலை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.
தைப்பொங்கலை முன்னிட்டு பூஜை வழிபாடுகளுக்கு தேவையான பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையகத்தின் நகர பிரதேசங்களுக்கு மக்கள் வருகை தந்திருந்தனர்.
பலர் கடைகளிலும் சந்தைத் தொகுதிகளிலும் பூஜைக்கான பொருட்கள் மற்றும் பானைகளையும் பழங்களையும் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது.
அதேவேளை ஆடையகங்களிலும் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாக்க கூறப்படும் நிலையில் உலகை காக்கும் சூரிய பொங்கலை கொண்டாட மக்கள் மகிழ்யுடன் தயாராகியுள்ளனர்.