பொலன்னறுவை வைத்தியசாலை சுகாதார ஊழியர் உயிரிழப்பு
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 36 வயதுடைய சுகாதார உதவியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக 2 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இன்று (26) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துபொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு, அவர்களில் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் 36 வயதுடைய சுகாதார உதவியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.