மருத்துவ ஒழுக்கநெறி தொடர்பில் வெளியான சமூக வலைத்தளப்பதிவு
அரசியல்வாதிகள் வைத்தியசாலைக்குள் நுழைந்துவிட்டால் மலிவான விளம்பரத்துக்காக நோயாளியின் இரகசியத்தன்மை மற்றும் மருத்துவ ஒழுக்கநெறி காற்றில் பறந்துவிடும் என சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் இப்பதிவு பதிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பதிவில், அரசியல்வாதிகள் வைத்தியசாலைக்குள் அதுவும் குறிப்பாக யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்துவிட்டால் மலிவான விளம்பரத்துக்காக நோயாளியின் இரகசியத்தன்மை மற்றும் மருத்துவ ஒழுக்கநெறி காற்றில் பறந்துவிடும்.
இது மீண்டும் மீண்டும் யாழ்ப்பாணத்தில் நிகழ்கிறது.
தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்காக பாதையில் சந்திக்கும் நோயாளியின் வருத்தத்துக்கு மருந்து எழுதி கொடுப்பதை காணொளி எடுத்து வெளியிடுவதும் இதுவும் கேவலமான விளம்பரங்கள் தான் எனவும் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.