சட்டமா அதிபருக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேரணை!
சட்டமா அதிபருக்கு எதிராக அரசியல் குற்றப்பிரேர ணையை கொண்டுவருவதற்கு சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளதாக விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு ஜனாதிபதியும் நாடாளுமன்றமும் மாத்திரம் காரணமில்லை என தெரிவித்த அவர், நீதித்துறையும் காரணம் எனவும் கூறினார்.
இலங்கையின் சட்டத்தரணிகள் சமூகத்தினர் சில விவகாரங்களில் தனது கடமையை நிறைவேற்ற தவறிவிட்டார் என கருதுகின்றனர் என தெரிவித்துள்ள விஜயதாச ராஜபக்ச,மல்வான மாளிகை தொடர்பான வழக்கு சட்டமா அதிபர் உரிய ஆதாரங்களை நீதித்துறையின் முன் முன்வைக்காததால் முடிவிற்கு வருகின்றதாகவும் கூறினார்.
இதன் காரணமாக சட்டமா அதிபர் தனது கடமையை நிறைவேற்ற தவறிவிட்டார் என இலங்கையின் சட்டத்தரணிகள் கருதுகின்றதாகவும், இதன்காரணமாக அவருக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவர திட்டமிடுகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் வேண்டுகோள் விடுக்கும் விடயங்களை நாடாளுமன்றமும் ஜனாதிபதியும் நிறைவேற்றுவதே இன்றைய சூழலின் தேவை என தெரிவித்துள்ள அவர் தான் பதவி விலகவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதையும் ஜனாதிபதி புரிந்துகொள்ளவேண்டும்,எனவும் கூறினார்.