இலவச மாசாஜ் பெற சென்ற பொலிஸாருக்கு ஏற்பட்ட நிலை!
மசாஜ் நிலையங்களிற்கு சென்று இலவசமாக யுவதிகளின் சேவையை பெற முயன்ற இரண்டு பொலிசார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பொலிஸ் சாரதி ஒருவரும், அவர்களின் வர்த்தக நண்பர்கள் இருவருமே இவ்வாறு கைதாகினர்.
கடந்த 24 ஆம் திகதி குறித்த நால்வரும் , கலல்கொட பகுதியிலுள்ள மசாஜ் நிலையமொனறிற்கு சென்றுள்ளனர். அந்த நிலையத்தின் மேலாளரை அழைத்து, தம்மை பொலிசார் என அவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் , தமக்க மசாஜ் செய்ய இளம் யுவதிகள் தேவையென கேட்டுள்ளனர்.
இந்நிலையில் பணம் செலுத்தி சேவையை பெறலாமென மேலாளர் கூறியபோது, தம்மால் பணம் தர முடியாது, இலவசமாக மசாஜ் செய்ய வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து வாக்குவாதம் முற்றி, அவர்கள் மேலாளரை தாக்க முயன்றபோது , அங்கிருந்த யுவதிகளும், மற்றவர்களும் இணைந்து அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
அதன் பின்னர், அவர்கள் தலவத்துகொடையில் உள்ள மற்றொரு மசாஜ் மையத்திற்கு சென்ற இலவச மசாஜ் கோரியபோது அங்கும் அனுதிக்காததால் அவர்கள் தர்க்கம் செய்த சமயம், அங்கு வந்த , கலல்கொட மசாஜ் சென்டரைச் சேர்ந்த யுவதி அந்தக் குழுவை அடையாளம் கண்டு அவர்கள் தொடர்பில் மேலாளரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து தலவத்துகொடையிலுள்ள முகாமையாளர், கலல்கொட மசாஜ் சென்டரின் முகாமையாளரை அழைத்து தான் எதிர்நோக்கும் நிலையைக் கூறிய நிலையில் , கலல்கொட மசாஜ் சென்டர் முகாமையாளர் குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு இரு தரப்பினரும் சர்ச்சையில் ஈடுபட்ட நிலையில் நிலைமை எல்லைமீறி போக, பொலிஸ் உத்தியோகத்தர்களும் நண்பர்களும் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றபோது அவர்களை மசாஜ் சென்டர் உரிமையாளர் உள்ளிட்ட குழுவினர் விரட்டிச் சென்றனர்.
இந்நிலையில் துரத்தியவர்களை மிரட்டுவதற்காக, கொட்டாவ பொலிஸ் நிலையத்திற்குள் வாகனத்தை செலுத்தினர். எனினும், மசாஜ் நிலைய குழுவினர் கொட்டாவ பொலிஸ் நிலையத்திற்குள் சென்று நடந்ததை தெரிவித்தனர்.
இதனையடுத்து கொட்டாவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸாருக்கு அறிவித்ததுடன் , பொலிஸ் கான்ஸ்டபிள், சாரதி மற்றும் அவர்களது நண்பர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
அதோடு முறைப்பாட்டாளர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு கைது செய்யப்பட்ட நால்வரும் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது சந்தேகநபர்கள் பிணையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.