காலிமுகத்திடலில் குவிந்த பொலிஸ் வாகனங்கள்; அச்சுறுத்தும் முயற்சியா?
கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு அருகில் பெருமளவு பொலிஸ்வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு பொலிஸ் வாகனங்களை நிறுத்தி ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகள இடம்பெறப்போகின்றனவா என்ற கரிசனை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அதேவேளை நியாயபூர்வமான அமைதியான ஆர்ப்பாட்டங்களை அச்சுறுத்தல் மூலம் அடக்குவதற்கான கோழைத்தனமான வெட்கக்கேடான முயற்சி இது என சமூக ஊடகங்களில் கண்டங்கள் பதிவாகிவருகின்றன.
இந்நிலையில் காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள மக்களின் அமைதியான போராட்டத்தை, சீர்குலைக்கும் முயற்சி நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போராட்டகாரர்களுக்கு ஆதரவு; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிகை!



