கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகித்த பொலிஸார்!
கொழும்பில் மருத்துவ பீட மாணவர்களின் ஒன்றியம் இன்றைய தினம் (16-05-2023) மேற்கொண்ட போராட்டத்தின் போது பொலிஸார் அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகித்து கலைந்துள்ளனர்.’
தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மருத்துவ பீட மாணவர்களின் ஒன்றியம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த எதிர்ப்பு பேரணி விஹாரமகாதேவி பூங்காவில் இருந்து முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணி ஹோர்ட்டன் பகுதிக்குள் பிரவேசித்த போது பொலிஸார் இடையூறு விளைவித்தனர்.
குறித்த பகுதியை கடந்து செல்லப்போவதில்லை எனவும், அப்பகுதியில் இருந்தவாறே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மாணவர்கள் கூறிய போதிலும் பொலிஸார் அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
இதனையடுத்து, மாணவர்கள் அங்கிருந்து எதிர்ப்பில் ஈடுபட்டதன் பின்னர் கலைந்து சென்றுள்ளனர்.