மலேசியா கொலை சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை தேடிவரும் பொலிஸார்
மலேசியா செந்தூலின் கீழ்கோவில் கிராமத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களை தேடிவருவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்கள் மூவரும் இலங்கையர்களென கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார்.
கொலை நடப்பதற்கு முன்னர் சந்தேக நபர்கள் இருவரும் கடை வீதியின் இரண்டாவது மாடியில் உள்ள வீடொன்றில் தங்கியுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம்
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கைகள் கட்டப்பட்டு தலையில் பிளாஸ்டிக் பைகளால் மூடப்பட்ட நிலையில் மூன்று பேரின் உடல்களை அவ் வீட்டில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்தோடு அவ் இரண்டு சந்தேகநபர்களையும் கொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களாகத் தெரியும் எனவும் சந்தேக நபர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே அவர்களது வீட்டில் தங்கியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு சந்தேக நபர்களும் கொலைகளை முன்னதாகவே திட்டமிட்டனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் சம்பவத்துக்கான நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.