பலாங்கொடை கஸ்ஸப தேரருக்கு பொலிஸார் அழைப்பு
ருவான்வெலிசாய முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலாங்கொடை கஸ்ஸப தேரரை, வாக்குமூலம் வழங்குவதற்காக நாளை (13) கொழும்பு மாவட்டக் குற்றப் பிரிவில் ஆஜராகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது ஏற்பட்ட குழப்பத்தில், பொலிஸ் அதிகாரிகளால் தாம் தாக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு அவர் தெரிவித்த கருத்து தொடர்பான விசாரணைக்காகவே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இதற்கு முன்னர் நேற்று (11) காலை 10 மணிக்கு வாக்குமூலம் வழங்குமாறு தேரருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், உடமலுவ பொலிஸ் நிலையம் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கஸ்ஸப தேரர் விசாரணைக்காக ஆஜராகவில்லை.
இதனையடுத்து, நாளை (13) கொழும்பு மாவட்டக் குற்றப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு தேரருக்கு மீண்டும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.