பொலிஸ் நிலையம் முற்றுகை; மேலும் இருவர் கைது
ஹங்குரான்கெத்த பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின் போது கட்டுக்கடங்காத வகையில் நடந்து கொண்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (02) கைது செய்யப்பட்ட நிலையில் மற்றைய இருவரும் திங்கட்கிழமை ( 03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 ஆம் திகதி வரை விளக்கமறியல்
35 வயதுடைய பெண் மற்றும் 46 மற்றும் 53 வயதுடைய இரு ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு வலப்பனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது இரண்டு ஆண் சந்தேக நபர்களும் ஜூலை 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் பெண் சந்தேக நபர் 50,000 ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஜூன் 21ஆம் திகதி ஹங்குரான்கெத்தவில் காணித் தகராறு காரணமாக ஒரு குழுவினரால் கொடூரமாக தாக்கப்பட்ட 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு பிரதேச மக்களால் பொலிஸ் நிலையம் சுற்றிவளைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.