கொழும்பில் பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் முயற்சி
புதிய இணைப்பு
பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று காலை (19) நடத்தப்பட்ட சோதனையின் போது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகனத்தில் வந்த இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோது, சந்தேகநபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரரை தாக்க முயன்றுள்ளார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இவ்வாறு காயமடைந்த சந்தேக நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் வாகனத்தில் வந்த மற்றொரு நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
முதலாம் இணைப்பு
பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இன்று (19) காலை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.