கைதி ஒருவரின் வயிற்றில் சிக்கிய பொருளால் பொலிஸார் அதிர்ச்சி!
சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவரின் வயிற்றில் இருந்து 56 கிராம் வெள்ளி நகை மீட்கப்பட்டுள்ள சம்பவம் பொலிஸாரை அதிர்ச்சிஅடைய வைத்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அங்குனகொலபெலஸ்ஸ சிறைக்கு அழைத்துசெல்லப்பட்ட குறித்த கைதி நகையை விழுங்கியதாக கூறப்பட்ட நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று நகையை மீட்டுள்ளனர்.
அதேவேளை சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், வெள்ளி நகையும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேகநபரான குறித்த கைதி 51 வயதுடைய நுகேகொட - மிரிஹான பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.