கொழும்பில் சட்டவிரோதமான சொகுசு ஜீப்பை பறிமுதல் செய்த பொலிஸார்!
மாரவில பிரதேசத்தில் இருந்து 10 மில்லியன் பெறுமதியான சொகுசு வாகனம் ஒன்று பாணந்துறை வலான பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து சட்டவிரோதமான முறையில் சேஸ் மற்றும் எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனத்தை வைத்திருந்த நபரிடம் கைப்பற்றப்பட்ட போது வாகனம் தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், குறித்த நபர் ஆறு மாதங்களுக்கு முன்னர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த மற்றுமொருவரிடமிருந்து சொகுசு வாகனத்தை கொள்வனவு செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வருவாய் உரிமத்திற்காக பதிவு செய்ய முயற்சித்தபோது எழுந்த சிக்கல்களைத் தொடர்ந்து வாகனத்தின் புதிய உரிமையாளர் விற்பனையாளருக்கு அறிவித்தார்.
அதன் பிறகு வருவாய் உரிமத்தைப் பெற ஒப்புக்கொண்ட வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அவர் எடுத்துச் சென்றார்.
இந்த விற்பனையாளர் சட்டவிரோத வாகன வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நபர் எனவும், இதற்கு முன்னர் இதேபோன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனம் தற்போது சிலாபம் பொலிஸாரின் பொறுப்பில் உள்ளதுடன், பாணந்துறை - வாலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.