50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை பறித்த பொலிஸார்
வெசாக் பண்டிகை தினங்களில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செலுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை களுத்துறை வடக்கு பொலிஸார் தங்களது பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
இந்த மோட்டார் சைக்கிள்களில் இலக்கத் தகடுகள் இருக்கவில்லை எனவும், சைலன்சர்கள் மாற்றப்பட்டு அதிக சத்தம் எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டிருந்ததாகவும், பக்கவாட்டுக் கண்ணாடிகள் இல்லாமலேயே அவை செலுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெசாக் பண்டிகை அலங்காரங்களை பார்வையிடுவதற்காக, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அதிக சத்தத்துடனும், அதேநேரம் ஆபத்தான முறையிலும் செலுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் களுத்துறை நகருக்குள் வருவதாக பொலிசாருக்குத் தகவல் கிடைத்திருந்தது.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த மோட்டார் சைக்கிள்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.