பொதுமக்களின் உதவியை நாடிய பொலிஸார்
இரு வீடுகளை உடைத்து பணம் மற்றும் சொத்துக்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் உள்ள வீடொன்றை உடைத்து 2 மில்லியன் ரூபா பணம் மற்றும் நகைகளை சந்தேகநபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி இரவு இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மற்றைய சந்தேகநபர் நேற்று கீழ் போமிரிய பகுதியில் உள்ள வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டின் தேடப்பட்டு வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை பொலிசார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.