திருகோணமலையில் பொலிஸார் அடாவடி; தியாகி திலீபனின் உருவப் படம் அகற்றப்பட்டது
தமிழர் பிரதேசமெங்கும் மக்களுக்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் திருகோணமலையில் , இன்று (19) காலை பொலிஸாரால் தியாக தீபம் திலீபனின் நினைவுப்படம் அகற்றப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின் நினைவுத் திருவுருவப்படம் சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டு, தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணியளவில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் திருகோணமலை தலைமை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளால் திலீபனின் நினைவுப்படம் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவுப்படம் அகற்றப்பட்டமை தொடர்பில் செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தியாக தீபம் திலீபனின் புகைப்படம் அகற்றப்பட்டமை தமிழர் மனங்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.