சிவில் உடையில் சுற்றித்திரியும் பொலிஸார்; விசேட நடவடிக்கை ஆரம்பம்!
பாடசாலை மாணவர்களை இலக்குவைக்கும் போதைப் பொருள் வியாபாரிகளை கண்டறிய விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிவில் உடையில் பாடசாலை சுற்றாடலில் பொலிஸாரை கடமைக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள்
கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன. அத்துடன் மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதன்படி, பாடசாலைகளைச் சுற்றி புலனாய்வுப் பிரிவினர் வழமையாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டு,
போதைப் பொருள் வர்த்தகர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.