வைத்தியசாலை வாசலில் லஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி
கொழும்பு - ராகம வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 200,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்காக, இரு பொலிஸ் அதிகாரிகளும் ஒரு நபரிடம் ரூ.200,000 இலஞ்சம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமறைவான சந்தேகநபர் மற்றும் சம்பவத்தில் தொடர்புடைய பிற தரப்பினரைக் கண்டறிய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.