தமிழர் பகுதியொன்றில் வசமாக சிக்கிய பொலிஸ் அதிகாரி ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்
முல்லைத்தீவு மாங்குளம் கொக்காவில் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக ஏ -9 வீதியின் கொக்காவில் பகுதியில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள்
கைது செய்யப்பட்டபோது, குறித்த பொலிஸ் அதிகாரி தனது உடைமையில் 92 கிராம் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒட்டுசுட்டான் காவல்துறை நிலையத்தில் போக்குவரத்து பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய குறித்த பொலிஸ் அதிகாரி, கையூட்டல் பெறல் உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில்,வெலிஓயா பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையிலேயே அவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.