நபரை கடத்தி பணத்தை கொள்ளையடித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

Viro
Report this article
நபரொருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குப் பிறகு, கொழும்பு தலைமை நீதவான் ஆஜர்படுத்தப்பட்டனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் முன்வைத்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபர்களை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டு, அடையாள அணிவகுப்புக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபரொருவரை கடத்திச் சென்று 16 இலட்சம் ரூபா கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை வாழைத்தோட்ட பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.